உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி....

9 dead after shooting in northern Pennsylvania

கோப்புப்படம்.

Published On :

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பென்சில்வேனியாவின் ஈரி நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் பலியானதாக அம்மாகாண ஆளுநர் ஜோஷ் ஷபிரோ சனிக்கிழமை தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்துவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

எனது 28 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை என்று ஈரி நகரின் காவல் தலைமை அதிகாரி ரிக் லோரா உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கூடுதல் விவரங்களை வழங்க மறுத்த லோரா, இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்த விதம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனக் கூறினார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதாகவும், தற்போது பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஈரி நகர நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. ஈரி நகரம் பிட்ஸ்பர்க் நகரத்திலிருந்து வடக்கே சுமார் 206 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Summary

Nine people were killed Friday in a shooting in Erie, Pennsylvania, Governor Josh Shapiro said Saturday. Police said the suspected shooter was also dead.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.