தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ: 5 பேர் பலி; 42 பேர் மீட்பு, 87 பேர் மாயம்

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து...

Fire on passenger ferry in Philippines leaves at least 5 dead, 87 people missing

மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் தீப்பற்றி எரியும் பயணிகள் படகு - எக்ஸ்

Published On :

மணிலா: மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியானதாகவும், 87 பேர் மாயமாகியுள்ளதாக கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் 'எம்வி ஜூன் ஆஸ்டர்' என்ற பயணிகள் படகு தலைநகர் மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு புதன்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, ​​கடலின் கரைக்கு அருகே சுமார் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது புதன்கிழமை இரவு படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அந்த படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என மொத்தம் 134 பேர் இருந்ததாக கூறப்பப்படுகிறது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 87 பேர் மாயமாகியுள்ளதாக கடலோக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை மற்றும் கடல் அலைகளின் சீற்றம் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பயணிகள் படகு தீ விபத்திற்கான இன்னும் காரணம் தெரியவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் வானொலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Summary

Fire on passenger ferry in Philippines leaves at least 5 dead, 87 people missing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.