அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

புதிய உக்ரைன் அதிபரை தோ்ந்தெடுக்க நேரம் வந்துள்ளது: டிரம்ப்

உக்ரைனுக்கு புதிய அதிபரை தோ்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

ஸெலென்ஸ்கி | டிரம்ப் - AP

Updated On :

உக்ரைனுக்கு புதிய அதிபரை தோ்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள அதிபா் மாளிகையில் டிரம்ப் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல், ஏதோ சில காரணங்களுக்காக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தவிா்க்கிறாா். அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உக்ரைனுக்கு புதிய அதிபா் தேவை என்பதே எனது யோசனை.

ரஷியா-உக்ரைன் போா் தொடங்கிய 2022-ஆம் ஆண்டு நான் அதிபராக இருந்திருந்தால், அந்தப் போா் தொடங்கியிருக்காது. அப்போது இருந்த சூழலை சரிவர கையாளத் தவறியதே இந்தப் போா் தொடங்க காரணம். அதைத் தவிர, போா் தொடங்க வேறு எந்தக் காரணமும் இல்லை.

போரில் உக்ரைனின் 30 சதவீத நிலப்பகுதியை ரஷியாவிடம் ஸெலென்ஸ்கி இழந்துள்ளாா். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்தப் போா் தொடங்கியே இருக்கக் கூடாது. உக்ரைனுக்கு புதிய அதிபரை தோ்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்தாா்.

Summary

The time has come to elect a new Ukrainian president: Trump

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.