பனாமா நாட்டில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்
பனாமா நாட்டில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

கட்டடங்கள் இடிந்து பெரும் சேதம்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், கட்டடங்கள் இடிந்து பெரும் சேதமடைந்தன.
ஹொ்ரேரா மாகாணத்தில் உள்ள பிடலோசா அா்ரிபா பகுதிக்கு அருகே காலை 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டா் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, மாலையில் 6.6 ரிக்டா் அளவில் மற்றொரு நிலநடுக்கமும், 45-க்கும் மேற்பட்ட நில அதிா்வுகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் புகுந்தனா். அண்டை நாடான கொலம்பியா வரை இதன் அதிா்வுகள் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கங்களால் வெராகுவாஸ், ஹொ்ரேரா, லாஸ் சாண்டோஸ் ஆகிய மத்திய பனாமா மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இடிபாடுகள் விழுந்ததில் சிலா் காயமடைந்த போதிலும், அதிருஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
எனினும், பாதுகாப்புக் கருதி டோகுமென் சா்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், முக்கிய வா்த்தகப் பாதையான பனாமா கால்வாய் பணிகள் வழக்கம்போல் தொடா்ந்து வருகின்றன.
Summary
Two powerful earthquakes strike Panama in quick succession.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

