தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

வடகொரியா புதிய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

வடகொரியா புதிய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை குறித்து...

North Korea fires multiple ballistic missiles...

வடகொரியா ஏவுகணை சோதனை - கோப்புப்படம்

Published On :

சமீபத்திய தொடர்ச்சியான ஆயுதச் சோதனைகளின் ஒரு பகுதியாக, வடகொரியா திங்கள்கிழமை தனது கிழக்குக் கடற்கரையை நோக்கி பல புதிய அதிநவீன ‘பாலிஸ்டிக்’ரக ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் வடகொரியா தனது விமான நிலையத்தை ஒரு முக்கிய ஏவுகணை ஏவுதளமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், வடகொரிய தலைநகர் பியாங்யாங்கைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்தனர்.

வடகொரியாவுக்கும், அதன் அண்டை நாடான தென்கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. இதில் தென்கொரியாவை அமெரிக்கா ஆதரிக்கிறது. தென்கொரியாவுடன் சோ்ந்து அவ்வப்போது போா் ஒத்திகையையும் அமெரிக்கா நடத்தி வருகிறது.

அண்மையில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கூட்டாக 5 நாள்கள் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டன. இதில் அந்த 3 நாடுகளின் ராணுவம், கடற்படை, விமானப் படை கலந்து கொண்டன. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி பரிசோதித்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் உருவானது. எனவே, வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கும் திட்டத்துடன் தென்கொரியாவுடனான போா்ப் பயிற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.

எனினும், கடந்த வாரம் வடகொரியா 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை சோதித்தது. இதில் ஒரு ஏவுகணை 450 கிலோ மீட்டா் தொலைவு பறந்து சென்று கடலில் விழுந்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனை நடந்த சில மணி நேரங்களில் வடகொரியா மீண்டும் கிழக்கு கடல்பகுதியை நோக்கி மற்றொரு பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. அந்த ஏவுகணை சுமாா் 600 கிலோ மீட்டா் தொலைவு சென்று கடலில் விழுந்தது.

இந்த நிலையில், சமீபத்திய தொடர்ச்சியான ஆயுதச் சோதனைகளின் ஒரு பகுதியாக, வடகொரியா திங்கள்கிழமை தனது கிழக்குக் கடற்கரையை நோக்கி பல புதிய அதிநவீன ‘பாலிஸ்டிக்’ரக ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் வடகொரியா தனது விமான நிலையத்தை ஒரு முக்கிய ஏவுகணை ஏவுதளமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், வடகொரிய தலைநகர் பியாங்யாங்கைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து இந்த ஏவுகணை சோதனைகளை செய்ததாக தென்கொரியாவின் கூட்டுப்படைத் தளபதிகள் தெரிவித்தனர்.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ராணுவத் தரவுகளின்படி, வடகொரிய தலைநகர் பியாங்யாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 9.20 மணியளவில் இந்த ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடற்பகுதி நோக்கி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சில ஏவுகணைகள் 900 கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் பயணித்ததாகவும், அந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடற்பரப்பில் விழுந்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகளின் எண்ணிக்கை அல்லது அவை எவ்வளவு தூரம் பறந்தன என்பதை தென்கொரிய கூட்டுப்படைத் தளபதிகள் உடனடியாகக் குறிப்பிடவில்லை.

கடந்த வாரம் தென் கொரியா, ஒலியின் வேகத்தை விட குறைந்தது ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கவும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்ட, உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட தனது முதல் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஆயுதத்தை விமானத்தில் சோதனை செய்த சில நாள்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது தெற்கின் வழக்கமான பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான நிலை என்று தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங் கூறியுள்ளார்.

வடகொரியா தனது அணுஆயுத வல்லமையை பலப்படுத்தும் நோக்கில் ஆயுத சோதனைகளை அதிகரித்து வருகிறது. தென்கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள ஏவுகணை பாதுகாப்புகளைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் இடைநிலை ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக வடகொரியா இந்த சோதனையை நடத்தியுள்ளது.

கிம் ஜாங் உன் தனது அணுஆயுதத் திட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அதே வேளையில், நீண்டகாலமாக முடங்கியுள்ள ராஜதந்திரத்தை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்க மற்றும் தென் கொரியாவின் சலுகைகளை நிராகரித்து வருவதால், வடகொரியா மற்ற ஏவுகணை சோதனைகளையும், நேரடித் துப்பாக்கிச் சூடு பயிற்சிகளையும் நடத்தியுள்ளதுடன், ஒரு புதிய போர்க்கப்பலையும் பணியில் அமர்த்தியுள்ளது.

நீண்டகாலமாக முடங்கியுள்ள ராஜதந்திரத்தை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்க மற்றும் தென்கொரியாவின் சலுகைகளை வடகொரியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

கடந்த மாதம், பலத்த பாதுகாப்புடன் கூடிய கொரிய எல்லைப் பகுதிக்கு அருகே கண்ணிவெடித் தாக்குதல்களில் மூன்று தென்கொரிய வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து பதற்றம் மேலும் மோசமடைந்தது.

தென்கொரியா ராணுவமும், அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் கட்டளை அமைப்பும், இந்த தாக்குதல்கள் வடகொரியாவால் பதிக்கப்பட்ட வெடிகுண்டுகளால் ஏற்பட்டதாக தெரிவித்தது. ஆனால், வடகொரியா இதற்குப் பொறுப்பேற்க மறுத்ததோடு, மன்னிப்புக் கோர வேண்டும் என்ற தென்கொரியாவின் கோரிக்கைகளையும் கேலி செய்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், கிம் தென்கொரியாவுடனான அனைத்து ராஜதந்திர மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டார். மேலும், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நீண்டகால முட்டுக்கட்டையின் போது, அந்த அண்டை நாட்டை ஒரு நிரந்தர எதிரி என்று தெரிவித்துள்ளார்.

North Korea on Monday fired multiple ballistic missiles toward its eastern waters, South Korea's military said, adding to a recent streak of weapons demonstrations that has heightened tensions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.