பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்வு!
அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது பற்றி..

ராபர்ட் இ ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு - X
2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, இந்தாண்டிற்கான மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் இ ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகிய இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் நோபல் பரிசு சுழற்சியில் அறிவிக்கப்படும் இறுதி மற்றும் மிக முக்கியமான விருது இதுவாகும். மேக்ரோ எகனாமிக் ஸ்திரத்தன்மைக்கான நுண் பொருளியல் அடித்தளங்களை உருவாக்கிதற்காக இவ்விருது இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், சீரற்ற நிலைகளையும் கட்டுப்படுத்தி ஸ்திரத்தன்மையை உருவாக்க நிதிக் கொள்கைகள் மற்றும் பணவியல் கொள்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான புதிய பொருளாதார மாதிரிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
Robert E. Hall and Michael Woodford won the Nobel memorial prize in economics on Monday for their work on the microeconomic foundations of macroeconomic stabilisation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


