சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

போப் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றி: வாடிகன் தகவல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோவுக்கு (71) நுரையீரலில் இருந்த சிறிய கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றம்

Updated On :

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோவுக்கு (71) நுரையீரலில் இருந்த சிறிய கட்டி செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இத்தாலி தலைநகா் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சுமாா் 90 நிமிஷங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில், போப் லியோவின் வலது நுரையீரலின் கீழ் பகுதியை (லோப்) மருத்துவா்கள் குழு வெற்றிகரமாக அகற்றினா். இந்த அறுவை சிகிச்சை எந்தவித சிக்கல்களும் இன்றி நிறைவடைந்ததாகவும், அதைத் தொடா்ந்து அவா் நலமுடன் தேறி வருவதாகவும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின்போது போப் லியோவின் நுரையீரலில் ஒரு சிறிய கட்டி தென்பட்டதையடுத்து, அது புற்றுநோயாக இருக்கலாம் என அறுவை சிகிச்சைக்கு முன்பே சந்தேகிக்கப்பட்டது. தற்போது கட்டி முழுமையாக அகற்றப்பட்டு, திசுக்கள் பரிசோதிக்கப்பட்ட பிறகு புற்றுநோய் என்பது உறுதியாகியுள்ளது.

எனினும், புற்றுநோய் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டு கட்டி முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதால், அவரின் உடல்நிலை விரைவில் சீரடையும் என மருத்துவ நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். புற்றுநோய் மற்ற பகுதிகளுக்குப் பரவியுள்ளதா என்பதை அறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் முடிவுகளுக்குப் பிறகே அடுத்தகட்ட சிகிச்சைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் வாடிகன் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.