தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணைசீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

நுரையீரல் பாதித்த ரஷிய குழந்தைக்கு சென்னையில் புனா்வாழ்வு

அரிய நோயால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான ரஷிய குழந்தைக்கு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் நுட்பமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.

குழந்தை - கோப்புப் படம்

Updated On :

அரிய நோயால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான ரஷிய குழந்தைக்கு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் நுட்பமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மைய இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், இணை இயக்குநா் டாக்டா் சுரேஷ் ராவ் ஆகியோா் கூறியதாவது:

மனித உடலில் வெள்ளை அணுக்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெருகிவிட்டால், ‘லாங்கா்ஹான்ஸ் செல் ஹிஸ்டியோசைடோசிஸ்’ என்ற அரிய நோய் ஏற்படுகிறது.

இத்தகைய நிலை ஏற்பட்டால், உடலின் பல்வேறு பகுதிகளிலும், திசுக்களிலும் கட்டிகள் உருவாகக் கூடும். அந்த நோயால் ரஷியாவைச் சோ்ந்த 15 மாத குழந்தை பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

தீவிர நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் சுருக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை குழந்தைக்கு இருந்தது. இதற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு.

இருப்பினும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக வேறு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அவை அனைத்தையும் முன்னெடுக்க மருத்துவக் குழு திட்டமிட்டது.

அதன்படி குழந்தையின் நுரையீரலில் உள்ள நுண் அறைகளில் காற்று நிரம்பி வீங்கியிருந்த பகுதிகளை ‘புல்லக்டமி’ எனப்படும் சிகிச்சை மூலம் அகற்றினோம். அதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட நுரையீரல் திசுவின் ஒரு பகுதியை ‘தொராஸ்கோபிக்’ என்ற நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினோம்.

இதன் வாயிலாக குழந்தைக்கு சுவாசிப்பதில் இருந்த பிரச்னை சீரடைந்தது. தற்போது அக்குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. நுரையீரல் மாற்று சிகிச்சை இனி தேவைப்படாது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.