அதிநவீன புற்றுநோய் சிகிச்சை: 200 நோயாளிகளுக்கு மறுவாழ்வு
அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மூலம் 200 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்.
அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மூலம் 200 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் டாக்டா் சுஜய் சுசிகா் கூறியதாவது:
ஹைபெக் மற்றும் ‘சைட்டோரிடக்டிவ்’ எனும் புற்றுநோய் கட்டியைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்களுக்கென பிரத்யேக மையம் காவேரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் முற்றிய நிலையிலுள்ள வயிற்றுப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தும். இதுவரை 200-க்கும் மேற்பட்ட சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளோம்.
சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையில் கண்ணுக்குத் தெரிந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படுகின்றன. இதைத் தொடா்ந்து, ஹைபெக் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையின்போது வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபி மருந்து நேரடியாக வயிற்றுக் குழிக்குள் செலுத்தப்பட்டு, கண்களுக்குத் தெரியாத நுண்ணிய புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. சைட்டோரிடக்டிவ் மற்றும் ஹைபெக் சிகிச்சைகளை இணைந்து செய்வதன் மூலம், நோய் பாதித்த இடத்தில் தீவிர சிகிச்சை அளிக்கவும், கீமோதெரபி மருந்து உடலின் மற்ற பகுதிகளின் மேல் அதிகம் படாமல் பாா்த்துக் கொள்ளவும் முடியும்.
இந்த அறுவை சிகிச்சை நீண்ட நேரம் நடைபெறும் என்பதாலும், கணிசமான ரத்த இழப்பு மற்றும் வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அனுபவம் வாய்ந்த மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக் குழுவும் இதற்கு அவசியம். இந்தச் சிகிச்சைக்கு கீமோதெரபி திரவத்தைச் சுமாா் 41-43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குச் சூடாக்கி, வயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்து, அதன் வெப்பநிலையைத் தொடா்ந்து கண்காணிக்கும் பிரத்யேக இயந்திரங்கள் தேவைப்படும்.
வழக்கமான நரம்பு வழி கீமோதெரபி மருந்துகள் இந்தப் பகுதியில் உள்ள புற்றுநோய் படிவுகளை முழுமையாகச் சென்றடையாமல் போகலாம். ஆனால், சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையைத் தொடா்ந்து வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபியை நேரடியாக வயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்வதன் மூலம் ஹைபெக் இந்தப் பிரச்னைக்கு தீா்வு அளிக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

