அமெரிக்காவில் 16 வயது சிறுவனுக்கு துப்பாக்கி பரிசளித்த தாய்! 4 பேரைக் கொன்ற மகன்!
அமெரிக்காவில் தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 16 வயது சிறுவனுக்கு அவரது தாய் துப்பாக்கி ஒன்றை பரிசாக அளித்திருந்தது தெரியவந்துள்ளது...

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற மழலையர் பள்ளிக்கூடம்... - AP
அமெரிக்காவில், மழலையர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 16 வயது சிறுவனுக்கு அவரது தாய் துப்பாக்கி ஒன்றை பரிசாக அளித்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள சில்வர் ரயில் தொடக்கப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை (அக். 15) 16 வயது சிறுவனான கிரிஃபின் ஜே ஜான் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் என 4 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அங்கு சென்ற கெய்லப் கியாமன்கோ (வயது 36) எனும் நபர் கிரிஃபின் ஜானை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கெய்லபின் 2 மகள்களும் தாக்குதல் நடைபெற்ற பள்ளியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டு சுட்டுக்கொல்லப்பட்ட கிரிஃபினுக்கு அவரது தாயாரான ஷான்டை நிக்கர்சன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மன அழுத்தம் காரணமா? அல்லது இனவெறித் தாக்குதலா? என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இந்தச் சம்பவமானது அமெரிக்காவில் நிகழாண்டில் (2026) துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்பட்ட 28 ஆவது படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
An investigation has revealed that the 16-year-old boy who opened fire at a kindergarten in the United States was given a gun by his mother as a gift.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


