சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

போர் மீண்டும் தொடங்கினாலும் நிலைப்பாட்டை மாற்றமாட்டோம்: ஈரான் உறுதி!

அமெரிக்கா, இஸ்ரேலுடன் மீண்டும் போர் தொடங்கினாலும் எங்களின் நிலைப்பாடுகளை மாற்றமாட்டோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

Iranian Foreign Minister Abbas Araghchi

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி - கோப்புப் படம்

Updated On :

அமெரிக்கா, இஸ்ரேலுடன் மீண்டும் போர் தொடங்கினாலும் எங்களின் நிலைப்பாடுகளை மாற்றமாட்டோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தவிருப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடுத்து வரும் நிலையில் இந்தக் கருத்துக்களை ஈரான் தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28 அன்று நடத்தியப் போர் தாக்குதல்களைக் குறிப்பிட்டு மற்றொரு மாபெரும் சீற்றம் நிகழவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இதுதொடர்பாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி பேசுகையில், “சமீபத்தில் புதிய போர் தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால், போருக்குப் பின்னான காலகட்டத்தைப் பற்றி நான் சிந்தித்து வருகிறேன். போர் நடந்தாலும், நடக்காவிட்டாலும் எங்களின் நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது” என்று கூறினார்.

மேலும், “அவர்கள் ஏற்கனவே இருமுறை அவ்வாறு போரை நடத்தி அதன் விளைவுகளையும் பார்த்தனர். அவர்கள் மீண்டும் போரைத் தொடங்க முயற்சித்தால், கடந்த கால முடிவுகளிலிருந்து வேறு புதிய விளைவுகள் எதையும் அடைய முடியாது என்பது அவர்களுக்கேத் தெரியும்.

தற்போதைய போர் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. உலகில் புதிய யதார்த்தங்கள் உருவாகி வருகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தும் அதன் நிர்வாகமும் இனி முன்பைப் போன்று இருக்காது.

அமைதியையும் நிலைத்தன்மையையும் அடைய, நமது பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படைகள் முற்றிலும் இல்லாத நிலை வரவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான சந்திப்பிற்குப் பிறகு ஈரானில் அக்டோபர் 19, 2026 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையிலும், அதனைச் சுற்றியும் நடைபெற்ற போர்த் தாக்குதல்களைத் தவிர அமெரிக்கா - ஈரான் இடையே ஏப்ரல் 8 அன்று ஏற்பட்ட போர் நிறுத்தம் தீவிரத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஹோர்முஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் முடிவுக்காகக் காத்திருக்கும் ஈரான், மேற்கு ஆசியாவில் புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Summary

Iran vows to not change stance even if war resumes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER