சர்வாதிகாரி மாவோ மீம்..! சீன மக்களிடம் மன்னிப்பு கேட்ட கால்பந்து வீரர் எம்பாபே!
சீன கம்யூனிஸ்ட் புரட்சியாளர் மாவோ குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கிலியன் எம்பாபே குறித்து...

சர்வாதிகாரி மீமிஸில், தங்கக் காலணி விருதுடன் எம்பாபே - படங்கள்: எக்ஸ் / கிலியன் எம்பாபே
சீன கம்யூனிஸ்ட் புரட்சியாளரும் நவீன சீனாவின் நிறுவனராகவும் கருதப்படும் மாவோ குறித்த தனது கருத்துக்கு, பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாபே மன்னிப்பு கேட்டுள்ளார்.
சீனாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாபே (27 வயது) சீன மக்களிடம் தனது எக்ஸ் பக்கத்தில் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரியல் மாட்ரிட் க்ளப்பில் விளையாடி வருகிறார். கேப்டனாக செயல்படும் அவர் மற்ற வீரர்களை அதிகமாக கட்டுப்படுத்துவதாகவும் சிறப்பாக விளையாடுவதாலும் அவரது ரசிகர்கள் ’சர்வாதிகாரி’ என அழைத்து வந்தார்கள்.
ஒரேயொரு மீம்ஸால் வந்த பிரச்னை
இந்த சர்வாதிகாரி என்பதற்கு ஏற்ப அவருக்கு ஒரு மீம் உருவாக்கப்பட்டு எம்பாபே ரசிகர்களால் அதிகமாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன. சமீபத்திய நேர்காணலில் எம்பாபேவிடம் உங்களுக்கு பிடித்தமான மீம் எது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த நேர்காணலில் எம்பாபே, “யாரோ ஒருவர் என்னை வைத்து ஒரு மீம் விடியோ உருவாக்கியிருப்பார்கள். அதில் இருப்பது ஒரு சீன சர்வதிகாரி என்று நினைக்கிறேன்; அவரைப் போலவே இருக்கும் மீம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அடிக்கடி அதனைப் பகிர்வேன்” என்றார்.
பின்விளைவுகள்
இந்தக் காரணத்தினால் சீனாவில் எம்பாபேவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அவரது ஜெர்ஸிக்கள் சீனாவில் இருந்து காட்சிப்படுத்துவது நீக்கப்பட்டன.
அவரது அணி பங்கேற்கும் லா லிகா போட்டிகள், பிரான்ஸ் போட்டிகளையும் அவர் பங்கேற்ற விளம்பரங்களையும் சீனாவில் ஒளிபரப்புவதை நிறுத்தினார்கள்.
இன்னும் ஒரு படி கூடுதலாகச் சென்று, மூன்று சீன நிறுவனங்கள் எம்பாபே உடன் வைத்திருந்த வணிக ரீதியான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டன. இதனால், அவருக்கும் லா லிகா தொடருக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கும் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டது.
மன்னிப்பு கேட்ட எம்பாபே
இந்தக் கடுமையான விளைவுகளை எதிர்பாராத கால்பந்து உலகம் தனித்தனியாக வருத்தம் தெரிவித்தன. லாலிகா கால்பந்து, ரியல் மாட்ரிட் அணிகளில் பக்கத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் எம்பாபே தனது எக்ஸ் பக்கத்தில் மூன்று மொழிகளில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
என்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அது சீன மக்களையும் உலகில் பலரையும் பாதித்துள்ளதைப் புரிந்துக்கொள்கிறேன். என் வார்த்தைகள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய நோக்கம் யாரையும் காயப்படுத்துவதில்லை. சீன மக்கள் மற்றும் அவர்கள் வரலாறு மீது மிகுதியான மரியாதை இருக்கிறது. அதனால், மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக 2019ல், என்பிஏ போட்டிகளை ஒளிபரப்பாமல் சீனாவில் போராட்டம் வெடித்தது. ஹூஸ்டன் ராக்கெட்ஸ் பொது மேலாளர் டேரில் மோரி சீன அரசுக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
யார் இந்த மா சேதுங்?
மா சேதுங் (மாவோ) ஒரு சீன புரட்சியாளர். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான தொடக்கக் காலக்கட்டத்தில் அதற்குத் தலைமை தாங்கியவர். சீனாவில் ஆட்சியில் இருந்த தேசியவாதக் கட்சிக்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று, நவீன சீனக் குடியரசை நிறுவியவர். அதனால் அவர் சீனக் குடியரசின் நிறுவனத் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இன்றும் கூட பலர் மாவோவை மிகுந்த மரியாதையுடன் போற்றுகின்றனர். இருப்பினும், அவர் சர்வாதிகார ஆட்சியை உள்ளடக்கிய ஒரு சிக்கலான வரலாற்றை விட்டுச் சென்றுள்ளார். அவர் முன்னெடுத்த 'பெரும் பாய்ச்சல்' (Great Leap Forward) போன்ற தொழில்மயமாக்கல் திட்டங்கள், பெரும் பஞ்சத்திற்கு வழிவகுத்தன; இதன் விளைவாக சுமார் 3 கோடி மக்கள் உயிரிழந்ததும் நினைவுகூரத்தக்கது.
ð¨Breaking: This is the theme that kylian mpabbe laughed to the great Chinese spiritual leader according to the Chinese but according to history he was a Chinese dictator who caused over 40million deaths in China. China have caught kylian mpabbe out of all deals done with him⦠pic.twitter.com/mW8Mw6BdOz
— mercy (@Patrick767329) October 28, 2026
— Kylian Mbappé (@KMbappe) October 27, 2026
Summary
Football star Kylian Mbappe apologizes for apparent reference to Mao Zedong as a ''dictator''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


