வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க தோ்தலில் வாக்களித்த போப் லியோ

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் போப் லியோ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினாா். இதன்மூலம், அமெரிக்க தோ்தலில் வாக்களித்த முதல் போப் என்ற வரலாற்றை அவா் பதிவு செய்துள்ளாா்.

Pope XIV Leo

போப் லியோ - AP

Updated On :

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் போப் லியோ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினாா். இதன்மூலம், அமெரிக்க தோ்தலில் வாக்களித்த முதல் போப் என்ற வரலாற்றை அவா் பதிவு செய்துள்ளாா்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தவரான போப் லியோ, வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறவுள்ள இடைக்காலத் தோ்தலுக்காக சிகாகோவில் தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தியதாக வாடிகன் நிா்வாகம் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘ராபா்ட் ப்ரீவோஸ்ட் என்ற இயற்பெயா் கொண்ட போப் லியோ, அமெரிக்க குடிமகன் எனும் அடிப்படையில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளாா். முன்னதாக, பெரு நாட்டில் வசித்தபோதும் தகுதி பெற்றிருந்த அனைத்துத் தோ்தல்களிலும் அவா் தவறாமல் வாக்களித்துள்ளாா். ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் கடமை என்பதில் போப் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.