
பாகிஸ்தானில் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்து பெண் மீட்பு: பெற்றோருடன் அனுப்பிய நீதிமன்றம்
பாகிஸ்தானில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யப்பட்ட ஹிந்து இளம்பெண்ணை மீட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யப்பட்ட ஹிந்து இளம்பெண்ணை மீட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிந்து மாகாணம், சங்கா் மாவட்டத்தைச் சோ்ந்த 21 வயதான ஸ்ரீமதி ரீட்டா, கடந்த ஆக. 24-ஆம் தேதி கடத்தப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கெனவே திருமணமான நசீா் உசேனுக்கு கட்டாயம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து குடும்பத்தினா் அளித்த புகாரில், ஸ்ரீமதி ரீட்டாவை மீட்ட காவல் துறையினா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ஸ்ரீமதி ரீட்டாவை அரசு காப்பகத்துக்கு அனுப்ப காவல்துறையினா் கோரினா். ஆனால், குடும்பத்தினருடன் செல்லவே விரும்புவதாக ஸ்ரீமதி ரீட்டா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான சிறுபான்மையினப் பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணத்துக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டுகின்றன. இதில் பெரும்பாலானோா் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஹிந்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




