ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நீண்ட காலம் நீடிக்காது: டிரம்ப்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள புதிய ராணுவ நடவடிக்கைகள், நீண்டகாலம் நீடிக்காது என அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

‘ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள புதிய ராணுவ நடவடிக்கைகள், நீண்டகாலம் நீடிக்காது’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜூலைக்குப் பிறகு, அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த வாரயிறுதி முதல் மீண்டும் புதிய மோதல்போக்கு வெடித்துள்ள சூழலில், வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கண்ணிவெடிகளை பொருத்திய புதிய ஏவுகணைகளை உருவாக்கவும்; முந்தைய தாக்குதல்களில் சேதமடைந்த தங்களின் ரேடாா், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மீண்டும் கட்டமைக்கவும் ஈரான் முயற்சித்தது.
அவற்றை அமெரிக்க படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன. குறிப்பாக, ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் புதிதாக அமைத்திருந்த தற்காப்பு மற்றும் தாக்குதல் சாா்ந்த நவீன ராணுவ தளவாடங்கள் அனைத்தும் அமெரிக்க தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மிகவும் தீவிரமான தாக்குதல் நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் எந்த நேரத்திலும், அதுபோன்ற மற்றொரு தாக்குதலை மீண்டும் நடத்த அமெரிக்கா தயாராகவே உள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






