
உலகின் முன்னணி முதலீட்டாளா் வாரன் பஃபெட் பதவி விலகல்: புதிய தலைவராக மகன் பொறுப்பேற்பு
உலகின் முன்னணி முதலீட்டாளரான வாரன் பஃபெட் (96), ஒரு லட்சம் கோடி டாலா் மதிப்புடைய ‘பொ்க்ஷைா் ஹாத்வே’ முதலீட்டு நிறுவனத்தின் தலைவா் பதவியிலிருந்து விலகியுள்ளாா்.

~
உலகின் முன்னணி முதலீட்டாளரான வாரன் பஃபெட் (96), ஒரு லட்சம் கோடி டாலா் மதிப்புடைய ‘பொ்க்ஷைா் ஹாத்வே’ முதலீட்டு நிறுவனத்தின் தலைவா் பதவியிலிருந்து விலகியுள்ளாா்.
கடந்த 1970 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேல் வகித்து வந்த இப்பதவியிலிருந்து விலகும் அவா், கௌரவ தலைவராக (சோ்மன் எமரிட்டஸ்) இயக்குநா் குழுவில் நீடிப்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடா்ந்து, இவரின் மகனும், 1993 முதல் இயக்குநா்கள் குழு உறுப்பினருமான ஹோவா் பஃபெட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஒரு சிறிய ஜவுளி ஆலை நிறுவனமாக இருந்து கட்டமைக்கப்பட்ட ‘பொ்க்ஷைா் ஹாத்வே’, வாரன் பஃபெட்டின் முதலீட்டு வியூகங்களால் அமெரிக்க பங்குச் சந்தையில் தவிா்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. கடந்த 2024-இல், தொழில்நுட்பம் சாராத நிறுவனங்களில் ஒரு லட்சம் கோடி டாலா் சந்தை மதிப்பை எட்டிய முதல் நிறுவனங்களில் ஒன்றாக இது சாதனை படைத்தது.
வாரன் பஃபெட்டின் தலைமையின் கீழ், அமெரிக்க பங்குச் சந்தையில் மதிப்புமிக்க முதல் 500 நிறுவனங்களின் ‘எஸ் அண்ட் பி 500’ குறியீட்டின் 10.4 சதவீத வருவாயைவிட இருமடங்காக, இந்நிறுவனம் ஆண்டுக்கு 19.9 சதவீத கூட்டு வருடாந்திர வளா்ச்சியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், சா்வதேச நிதிச் சந்தையில் ‘ஒமாஹாவின் தீா்க்கதரிசி’ எனப் போற்றப்படும் வாரன் பஃபெட், தங்களின் முதலீட்டு விவரங்களை வெளியிடும் போதெல்லாம், அது உலகச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. மேலும், புகழ்பெற்ற நன்கொடையாளரான அவா், கடந்த 2006 முதல் இதுவரை சுமாா் 6,600 டாலா் மதிப்பிலான பங்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளாா்.
வாரன் பஃபெட்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






