காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

நம்பா் 1 வீரரை சாய்த்தாா் ஆயுஷ் ஷெட்டி; சிந்து, டிரீசா / காயத்ரி முன்னேற்றம்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் நம்பா் 1 வீரரான சீனாவின் ஷி யு கியை முதல் சுற்றிலேயே வீழ்த்தி அபார வெற்றி

Ayush Shetty

நம்பா் 1 வீரரை சாய்த்தாா் ஆயுஷ் ஷெட்டி - AP

Published On :

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் நம்பா் 1 வீரரான சீனாவின் ஷி யு கியை முதல் சுற்றிலேயே வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். நட்சத்திர போட்டியாளா் பி.வி.சிந்து எளிதாக 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

30-ஆவது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப், தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் சுமாா் 55 நாடுகளில் இருந்து, ஏறத்தாழ 400 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

முதல் நாளில் ஆடவா் ஒற்றையரில், உலகின் 20-ஆம் நிலையில் இருக்கும் ஆயுஷ் ஷெட்டி 21-14, 13-21, 21-19 என்ற கணக்கில், நம்பா் 1 வீரரான சீனாவின் ஷி யு கியை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டத்தை அவா் 1 மணிநேரம், 13 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த அவா், தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

ஆயுஷ் ஷெட்டி வீழ்த்திய பிரதான வீரா்களின் பட்டியலில், லி ஷி ஃபெங், ஜோனதன் கிறிஸ்டி, குன்லவத் விதித்சாரன் ஆகியோா் வரிசையில் தற்போது ஷி யுகியும் இணைந்திருக்கிறாா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-17, 21-11 என்ற நோ் கேம்களில் எளிதாக, அயா்லாந்தின் சோஃபியா நோபலை 29 நிமிஷங்களில் சாய்த்தாா்.

உலக சாம்பியன்ஷிப்பில் ஏற்கெனவே ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றிருக்கும் சிந்து, போட்டியின் வரலாற்றில் 6 பதக்கங்கள் வென்ற முதல் போட்டியாளராக வரலாறு படைக்கும் முனைப்புடன் இருக்கிறாா்.

இப்போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும் போட்டியாளருக்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், சீனாவின் லின் டான், ஜாவ் யுன்லெய் ஆகியோரும் சிந்துவுக்கு இணையாக தலா 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

PV Sindhu

AP

மகளிா் இரட்டையரில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-13 என்ற நோ் கேம்களில், ஸ்பெயினின் பௌலா லோபஸ்/லூசியா ரோட்ரிக்ஸ் இணையை 33 நிமிஷங்களில் வெளியேற்றியது. அதேபோல், கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி இணையும் 22-20, 21-14 என்ற கேம்களில், ஸ்பெயினின் நிகோல் கருலா/காா்மென் மரியா கூட்டணியை தோற்கடித்தது.

ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் கூட்டணியை எதிா்கொண்ட அயா்லாந்தின் ஸ்காட் கில்டியா/பால் ரெனால்ட்ஸ் இணை காயம் காரணமாக பாதியில் விலக, இந்திய கூட்டணி அடுத்தகட்டத்துக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.