
பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் ஆப்கன் பயங்கரவாதி
பாகிஸ்தான் மசூதி மீது ஆப்கன் பயங்கரவாதி தற்கொலைப் படை தாக்குதல்...

பாகிஸ்தான் மசூதி மீது ஆப்கன் பயங்கரவாதி தற்கொலைப் படை தாக்குதல் - ஏபி
வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணம், கோஹட் மாவட்டத்தில் காவல் வளாக மசூதி மீது வெள்ளிக்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவா், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக போலீஸாரும், அவா்களின் குடும்பத்தினரும் மசூதியில் திரண்டிருந்த சூழலில், வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தினா். இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், குண்டுவெடிப்பைத் தொடா்ந்து காவல் வளாகத்துக்குள் நுழைய முயன்ற 8 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இச்சம்பவம் குறித்து காவல்துறை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப் படையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Summary
Afghan terrorist involved in Pakistan mosque attack
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







