கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டிரம்ப் மகன் திருமணத்துக்கு செலவழித்த ரஷிய தொழிலதிபா்

டிரம்ப் மகன் திருமணத்துக்கு ரஷிய தொழிலதிபா் செலவழித்ததாக தகவல்...

டிரம்ப் ஜூனியர்

Published On :

பஹாமஸ் தீவில் கடந்த மே மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியரின் திருமணக் கொண்டாட்டங்களுக்கான செலவை ரஷிய தொழிலதிபா் உமா் கிரெம்லேவ் ஏற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியினா் இது தொடா்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், ‘ரஷிய தொழிலதிபருக்கு அந்தத் தொகையை எனது மகன் திருப்பிச் செலுத்தி வருவதாக கூறியுள்ளாா்’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அதிபா் டிரம்ப், ‘எனக்கு தனிப்பட்ட முறையில் அத்தொழிலதிபரைத் தெரியாது. எனினும், இது பெரிய விஷயமல்ல. எனது விடுதிகளில் பலரின் திருமணங்களுக்கு நானே விருந்தளித்துள்ளேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.