மாற்றம் ஒன்றே மாறாதது: 2021-ல் என்னவெல்லாம் மாறியது? ஒரு சின்ன பட்டியல்

மாற்றம்.. எது ஒன்று, அதன் நிலையிலிருந்து மாறி வேறொன்றாகவோ வேறாகவோ மாறுகிறதோ.. அதுவே மாற்றம்.
மாற்றம் ஒன்றே மாறாதது: 2021-ல் என்னவெல்லாம் மாறியது? ஒரு சின்ன பட்டியல்
மாற்றம் ஒன்றே மாறாதது: 2021-ல் என்னவெல்லாம் மாறியது? ஒரு சின்ன பட்டியல்

மாற்றம்.. எது ஒன்று, அதன் நிலையிலிருந்து மாறி வேறொன்றாகவோ வேறாகவோ மாறுகிறதோ.. அதுவே மாற்றம். ஒவ்வொரு அணுவும் மாற்றத்தை அடைகின்றன. காற்று, மழை, காலநிலை, தட்பவெப்பம், மனிதன், மனித மனம்  என அனைத்துமே மாறிக் கொண்டேயிருக்கின்றன.

சில மாற்றங்கள் காலப்போக்கிலும் சில மாற்றங்கள் வெளிக்காரணிகளாலும் சில உள்காரணிகளாலும் நிகழ்கின்றன. ஆனால் எது நின்றாலும் மாற்றம் ஒன்று மட்டும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறார்கள்.

2021ஆம் ஆண்டை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை பாடங்களை, அனுபவங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துச் சென்றிருக்கிறது. இந்த 2021ஆம் ஆண்டில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்னத்தான் மாறியிருக்கிறது என்று திரும்பிப் பார்த்தால்..

ஒரு குட்டி பட்டியல் வந்தது. அதை இங்கே பகிர்ந்துள்ளோம்.

ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பயனாளிகளின் சில விவரங்களை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

மத்திய ரிசர்வ்  காவல் படையின் 'எலைட் கோப்ரா'  படைப்பிரிவில் முதல் முறையாக 34 பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

தமிழகத்தில் மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில்லை என்ற நிலை மாறியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கம் வென்று வரலாறு படைத்தாா். கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டு வரும் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்த முதல் மகுடம் இது.

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் என்பது, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று பெயர் மாற்றம் செய்து குஜராத் அரசு அறிவித்தது. சமஸ்கிருதத்தில் கமலம் என்றால் தாமரை என்று பொருள்.

கரோனா தடுப்பூசியால், இதுவரை பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்துவது மாறி, பிள்ளைகள் தங்களது பெற்றோரை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தும் முறை அறிமுகமானது.

வெங்காயத்தை நறுக்கும்போதுதான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு தக்காளியை வாங்கும் போதே மக்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வந்தது.

பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதியில், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால், அதன் வட்டிக்கு வரி விதிக்கும் புதிய முறையை மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது அறிமுகப்படுத்தியது.

அதுபோல, ஓய்வூதியம் மற்றும் வைப்புத் தொகையில் கிடைக்கும் வட்டி மட்டுமே வருவாயாக இருக்கும் மூத்த குடிமக்கள், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயா் ‘மெட்டா’ என மாற்றப்படுவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி மாா்க் ஸக்கா்பொ்க் அறிவித்தார்.

பெட்ரோல் விலையைவிடவும் டீசல் விலை குறைவாக இருக்கும் நிலை மாறி, இந்த ஆண்டு பெட்ரோல் விலைக்கு போட்டியாக டீசல் விலையும் கடுமையான உயர்வை சந்தித்து, எரிபொருள் விலைகள் சதமடித்தன.

2019ஆம் ஆண்டு கரோனாவாக அறிமுகமாகி, 2021ல் டெல்டாவாக மாறி, ஆண்டின் இறுதியில் கரோனா, ஒமைக்ரானாக, டெல்மைக்ரானாகவும் உருப்பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com