4. கவனம் சிதறாமை

நீங்கள் விளையாட்டு வீரராக விரும்பினால் இந்த குணாதிசயம் மிக மிக முக்கியமான ஒன்று.
4. கவனம் சிதறாமை

நீங்கள் விளையாட்டு வீரராக விரும்பினால் இந்த குணாதிசயம் மிக மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் கடந்த வாரங்களில் கூறியதை போல் ஒரு விளையாட்டு வீரராவது என்பது 6 வயதிலிருந்தே ஆரம்பிக்கிறது.6 வயதிலிருந்து 30 வயது என்பது ஒரு விளையாட்டு வீரரின் சராசரி விளையாட்டுக்கு காலம். எனவே "கவனம் சிதறாமை" என்பது ஒவ்வொரு வயதிலும் மாறுபடும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

6-10 வயது:

இவ்வயதில் ஒரு விஷயத்தில் கவனம் (Focus) செய்வது அல்ல செய்ய வைப்பது மிகவும் கடினமான விஷயம். இவ்வயதில் ஒவ்வொரு புது நுணுக்கங்களையும் (Technique) விளையாட்டின் மூலமாகவே கற்றுத் தர வேண்டும். எனவே அவர்கள் விளையாட்டையும்,அதற்கான நுணுக்கங்களையும் ஒருசேரக் கற்பார்கள்.

12-18 வயது:

12-18 வயதிலே,உங்கள் குழந்தை,அதிக நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும்.அதே நேரத்தில் வெளி உலகத்தைப் பற்றியும் அதிகம் கற்றுக் கொள்ளும் வயது இதுவே.எனவே அவர்களின் கவனம் சிதற வாய்ப்புகள் மிக மிக அதிகம்.மொபைல் போன்,டிவி,இன்டர்நெட் போன்றவைகளில் அதிக நேரம் செலவழிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.மிக முக்கியமாக இவர்கள் "Distract' ஆவதை அறிந்து கட்டுப்படுத்துதல் அவசியம்.

18-24 வயது:

18-24 வயது என்பதே,ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக செயல்படும் காலக்கட்டம்.இவ்வளவு வருட பயிற்சிகள்,நுணுக்கங்கள் ஒன்று சேர்ந்து ஒரு விளையாட்டு வீரர் "Peak" எனும் உச்சம் தொடுவது இவ்வயதில்தான்.இவ்வயதில்தான் உங்கள் குழந்தை விளையாட்டின் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும். எனவே பணமோ, புகழோ, ஆடம்பரங்களோ, வயதோ எதுவும் அவர்களின் கவனத்தை சிதறடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

24-30 வயது:

ஒரு விளையாட்டு வீரரின் 'Peak' காலம்  முடிய ஆரம்பிப்பது இந்த இடைப்பட்ட வயதில்தான்.அதேபோல் காயங்களும் அதிகம் ஏற்படும் வயதும் இதுதான்.மற்றும் விளையாட்டிலிருந்து ஓய்வு,அதன் பிறகான வாழ்க்கை போன்ற யோசனைகள் வரும் வயது இதுதான்.இவையெல்லாம் ஒரு விளையாட்டு வீரரின் கவனங்களை சிதறடிக்கமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்பது மிகவும் முக்கியம்.ஏனெனில் விமர்சனம் என்பது உங்களை ஆக்கவும் செய்யும்,அழிக்கவும் செய்யும்..எனவே விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறனையும்,விமர்சனங்களால் கவனம் சிதறாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com