Enable Javscript for better performance
2. விளையாட்டில் எவை எல்லாம் முக்கியம்?- Dinamani

சுடச்சுட

    

    2. விளையாட்டில் எவை எல்லாம் முக்கியம்? 

    By டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன்.  |   Published on : 21st June 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    CM24GILLI

     

    உங்கள் குழந்தை விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள் என அறிந்தவுடன், அவர்களை வெவ்வேறு விளையாட்டு விளையாட அனுமதியுங்கள். உதாரணமாக, 3-4 வயதில், உங்கள் குழந்தை விளையாட ஆர்வம் காட்டுகிறது என வைத்து கொள்வோம். அவ்வயதிலிருந்து உங்கள் குழந்தைகளை, வெவ்வேறு விளையாட்டு விளையாட வையுங்கள். சுமார் 5-6 வருடங்கள் உங்கள் குழந்தைகளை இவ்வாறு வெவ்வேறு விளையாட்டுக்களை விளையாட வைக்க வேண்டும். ஏனெனில்,அப்போதுதான் உங்கள் குழந்தைகள்  உடல் மற்றும் உளவியல்ரீதியாக வெவ்வேறு விளையாட்டுகளின் மூலம் பன்முக உடல் இயக்கங்களை கற்றுக் கொள்வார்கள். அதே போல் உளவியல்ரீதியாக, பல்வேறு விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக் கொள்வார்கள். இவ்வாறு உங்கள் குழந்தையை தயார்படுத்துவதன் மூலம், அவர்கள் எம்மாதிரியான விளையாட்டுகளில் சிறப்பாக செய்யப்படுகிறார்கள் என்பதையும் எளிதில் கண்டறிய முடியும்.

    குழந்தைகளுக்கும் எந்த விளையாட்டை அவர்கள் மிகவும் சிறப்பாகவும், ஆர்வமாகவும் விளையாடுகிறார்கள் என்பதையும் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். உடல்ரீதியான,விளையாட்டுக்கள் மட்டுமில்லாமல் உளவியல் ரீதியாகவும்,வெவ்வேறு விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும்.இவ்வாறு உங்கள் குழந்தைகளை விளையாட வைப்பதன் மூலம், அவர்களின் உடல்ரீதியான திறன்களும்,அறிவுக் கூர்மையும் அதிகரிக்கும். இந்த சிறு வயதிலேயே நுணுக்கங்களை கற்றுக் கொண்டால் பிற்காலத்தில், அவை அவர்களுக்கு மாறுபட்ட உத்திகளை (different ideas)சரியான நேரத்தில், மிகக் குறுகிய காலத்தில் தேர்தெடுக்க உதவும்.

    உடல்ரீதியான விளையாட்டுகள்:                                                                    

    • கிரிக்கெட் 
    • டென்னிஸ் 
    • பேட்மின்டன் 
    • புட்பால் 
    • ஸ்விம்மிங் 

    உளவியல்ரீதியான விளையாட்டுகள்:

    • செஸ் 
    • சுடோக்கு 
    • puzzle கேம்ஸ் 
    • மெமரி கேம்ஸ்

    குறிப்பிட்ட விளையாட்டுக்கான சிறப்பு கவனம்:

    உங்கள் குழந்தை 9-10 வயதைத் தொடும் போது, நீங்களும், உங்கள் குழந்தையும், எந்த ஒரு விளையாட்டை தேர்வு செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்திருத்தல் அவசியம். அவ்வாறு முடிவெடுத்தவுடன், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, அக்குறிப்பிட்ட விளையாட்டுக்கான சிறந்த பயிற்சியாளரை அடையாளம் காண்பது. பயிற்ச்சியாளர் உங்கள் குழந்தையின் வாழ்வில், அதாவது விளையாட்டுத் துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகிறவர். ஆம், இன்றிலிருந்து உங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவு போகிறவர் பயிற்சியாரே. உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்தளவு கிரிக்கெட் விளையாட்டில் உயரம் அடைய முக்கியக் காரணம் அவரின் பயிற்சியாளர் ரமாகாந்த். அவரே சச்சினை இத்தகைய உயரத்துக்கு அழைத்துச் சென்றார். மேலும் சொல்ல வேண்டுமெனில், அவரே சச்சினை வெவ்வேறு போட்டிகளுக்கு தன்னுடைய வாகனத்தில் அழைத்து செல்வார். எங்கெல்லாம் கிரிக்கெட் போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் விளையாட வைப்பார். போட்டிகளில் அதிகம் கலந்து கொள்ளும் போது, ஒருவருடைய ஆற்றல் மற்றும் நுணுக்கங்கள் மேம்படும். எனவே பயிற்சியாளர் என்பவர் உங்கள் குழந்தை வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகிறவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதனாலேயே நீங்கள் சிறந்த பயிற்சியாளரை நியமித்தல் அவசியம். பயிற்சியாளரே உங்கள் குழந்தையின் விளையாட்டு அறிவை, நுணுக்கங்களை 100 சதவிகிதம் வளர்க்கப் போகிறவர்.

    பயிற்சியாளரின் பங்கு:

    • குறிப்பிட்ட விளையாட்டின் நுணுக்கங்கள் கற்றுத் தருதல்
    • தேவையான பயிற்சிகள் அளித்தல்
    • உளவியல் மேம்பாடு அடையச் செய்தல் 
    • சிறப்பு நுணுக்கங்களைக் கற்பித்தல் 
    • உளவியல் நுணுக்கங்கள் பற்றி விளக்குதல்
    • சவால்களை எதிர்கொள்ளும் திறமை நுணுக்கங்கள் கூறுதல் 
    • உடல் மேம்பாடு செய்ய பயிற்றுவித்தல்
    • ஊட்டச்சத்து நுணுக்கங்கள் தேர்ந்தெடுத்தல்
    • சிறந்த உபகரணங்கள் தேர்வு செய்தல்
    • பயிற்சிக்கான நேர ஒதுக்கீடு செய்தல்

    மேற்கூறியவை எல்லாம் சில உதாரணங்களே. சிறந்த பயிச்சியாளர், இந்த நுணுக்கங்களை எல்லாம் குறுகிய காலத்தில் உங்கள் குழந்தைகளை கற்றுக் கொள்ள வைப்பார். அதே போல், இத்தருணத்தில் சிறந்த உபகரணங்களை வாங்கி தருதல் அவசியம்.

    விளையாட்டு நுணுக்கங்கள்:

    ஒவ்வொரு விளையாட்டும் தனித்துவம் வாய்ந்தவை. அவ்விளையாட்டை சிறப்பாக விளையாட அந்த விளையாட்டின் நுணுக்கங்களை அறிவது அவசியம். எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால், நிறைய நுணுக்கங்களை அறிய வேண்டி இருக்கிறது. நீங்கள் பேட்ஸ்மேனாக வேண்டுமெனில், வெவ்வேறு பந்து வீச்சிற்கான சிறப்பு நுணுக்கங்கள், வெவ்வேறு பார்மட்டிர்க்கான (Format) நுணுக்கங்கள், என மேலும் பல விஷயங்களை அறிய வேண்டி இருக்கிறது. இது தவிர நீங்கள் எங்கு நிற்க (Position)வேண்டும், உங்கள் மட்டையின் (Bat) பொசிஷன், உங்கள் உடலின் பொசிஷன், பௌலரின் பொசிஷன், பௌலர் பந்தை (Ball) வேண்டி வரும் பொசிஷன், எம்மாதிரியான ஆடுகளம், ஆடுகளத்திற்கு தகுந்தாற் போல் எப்படி உங்களை தயார் செய்வது, இப்படி பலவிதமான நுணுக்கங்களை அறிய வேண்டி இருக்கிறது. இம்மாதிரியான  எல்லா நுணுக்கங்களையும் பயிற்சியாளர் மட்டுமே சொல்லிக் கொடுக்க மாட்டார். இணையத்தின் மூலம் நாமே கூட தெரிந்து கொள்ளலாம். உலகின் சில சிறந்த பயிற்சியாளர்களை நீங்கள் இன்டர்நெட் மூலமே அணுக முடியும். எனவே உங்கள் குழந்தையின் இன்டர்நெட் அறிவையும் வளர்த்தல் மிகவும் அவசியம். இன்டர்நெட் மூலம் உங்கள் குழந்தைகள் உலகின் மிக சிறந்த பயிற்சியாளர்களிடமிருந்து சிறந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியம். அது மட்டுமில்லாமல், புதுப் புது நுணுக்கங்களையும், தங்கள் விளையாட்டு அறிவையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாது விளையாட்டு அறிவை upto date ஆகவும் வைத்திருக்க முடியும்.

    விளையாட்டு உபகரணங்கள்:

    மேற்கூறிய கருத்துக்களான பயிற்சியாளர், சிறந்த நுணுக்கங்கள் ஒரு விளையாட்டு வீரராவதற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விளையாட்டு உபகரணங்களும் மிகவும் இன்றியமையாதவை. விளையாடுவதற்கு மட்டுமின்றி பயிற்சிகளுக்கென சிறப்பு உபகரணங்களும் இருக்கின்றன. ஆம்,வீட்டில் பயிற்சி இடத்தில், விளையாடுவதற்கு முன், பின் என ஒவ்வொரு இடங்களில் பயிற்சி மேற்கொள்ள உபகரணங்கள் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் அத்தியாசமானவையே. ஒரு விளையாட்டு வீரனுக்கு உபகரணங்கள் எவ்வளவு அவசியம் என்பதைப் பாப்போம். எடுத்துக்காட்டாக "Perfection Point"என ஒரு விளையாட்டுப்  புத்தகம் பதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், உலகில் உள்ள அசாதாரண மனிதர்கள், விளையாட்டில் உலக சாதனைகள் பற்றி மிக விரிவாக அலசுகிறது. அதே போல் தற்போதைய உலகே சாதனைகளை முறியடிக்க எவ்வளவு வருடங்கள் ஆகும் மற்றும் அவ்விளையாட்டு வீரரின் உடல் தோற்றம் எப்படி இருக்க வேண்டும், அவரின் உடை, உபகரணங்கள் எம்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக, உலகின் "மின்னல் வீரன்" உசேன் போல்ட் (Usen Bolt) செய்த 100 மீட்டர் தொலைவு ஓட்டத்தின் உலக சாதனை (9.58 நொடிகள்) 2909-ல் 8.99 நொடிகளில் முறியடிக்க வாய்ப்புள்ளது என அப்புத்தகம் கூறுகிறது. இந்த ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த விளையாட்டு வீரரின் எடை, தசை வலிமை மற்றும் எவ்வகையான உபகரணங்கள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் எம்மாதிரியான காலணிகள் (Shoes),உடைகள் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையே நாம் இங்கு அறிவுறுத்துகிறோம். உங்கள் பயிற்சி, நுணுக்கங்கள், உணவு, எவ்வளவு முக்கியமோ அதே அளவு விளையாட்டு உபகரணங்களும் முக்கியம்.அதே போல் நாளுக்கு நாள் உங்கள் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்தலும் (Update) அவசியம். எனவே விளையாட்டு உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும், சரியான, தரமான விளையாட்டு உபகரணங்களை வாங்குவது மிகவும் அவசியம். நம் தமிழ் மொழியில் ஆள் பாதி ஆடை பாதி என கோருவது போல், விளையாட்டில் உங்கள் உபகரணங்களின் பங்கும் சரி பாதி இருக்கிறது.

    விளையாடலாம்....

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai