1. உங்கள் குழந்தையின் விளையாட்டு திறனை எப்படி தெரிந்து கொள்வது?

சில வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தைகளின் விளையாட்டு திறன்  அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வருகிறது என நம்பப்பட்டது
1. உங்கள் குழந்தையின் விளையாட்டு திறனை எப்படி தெரிந்து கொள்வது?

சில வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தைகளின் விளையாட்டு திறன்  அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வருகிறது என நம்பப்பட்டது. அதாவது மரபணுக்கள் (Genes) மூலம் கடத்தப்படுகிறது  என நம்பினார்கள். ஆனால் ஆராய்ச்சிகள் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை என உறுதி செய்து விட்டது. உதாரணமாக, கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கரின் பெற்றோர்கள் கிரிக்கெட் அதிகம் பார்ப்பவர்கள் கூட கிடையாது. அப்படியென்றால் ஒரு சில குழந்தைகள் அதிக விளையாட்டு திறன் கொண்டவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?

ஒரு குழந்தைக்கு விளையாட்டுக்கான விதை, குழந்தை கருவிலிருக்கும் போதே விதைக்கப்படுகிறது. ஆம், ஒரு சில பெற்ற்றோர்கள் குழந்தை கருவிலிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட விளையாட்டை விரும்பிப் பார்ப்பார்கள். அந்த ஓசை, விளையாட்டு விளையாடும் விதம், சொல்லப் போனால் விளையாட்டு நுணுக்கங்கள் எல்லாம் தாயின் மூலம் குழந்தைக்கு கடத்தப்படுகிறது என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. எனவே குழந்தை பிறக்கும் முன்னரே இதற்கான விதையை ஒரு குழந்தையிடம் விதைக்கலாம்.

குழந்தை பிறந்தபின் விளையாட்டு திறனை எப்படி கணிப்பது என்று இப்போது பார்க்கலாம். உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவு கோ-ஆர்டினேஷன் (Co-ordination),  அட்டேன்ஷன் (Attention), க்ராஸ்ப்பிங் பவர் (Grasping Power), ஃபோகஸ் (Focus) உள்ளவர்களாக உள்ளார்கள் என்பதை கண்டறிவதே இதற்கான அடிப்படை. இவை அனைத்தும் கூர்மையாக இருந்தால் உங்கள் குழந்தை விளையாட்டு வீரராக்குவது சுலபம்.

ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்ப்போம்.

ஒருங்கிணைப்பு (Co-ordination)

ஒவ்வொரு விஷயத்தையும் உங்கள் குழந்தை எவ்வளவு ஒருங்கிணைப்பாக செய்கிறது என்பதை அறிவது அவசியம்.எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு பந்தை அவர்கள் நோக்கி எரியும் போது, அதை கண்களால் பார்த்து, சரியான நேரத்தில் கைகளின் மூலம் பிடிக்க வேண்டும்.

கவனம் (Attention Power)

ஒரு விஷயத்தை செய்ய வேண்டியதற்கான கவனம். ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் செய்ய அவ்விஷயத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுதல் அவசியம். எடுத்துக்காட்டாக ஒரு பந்தை பத்து முறை, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எறிய வேண்டும். ஒவ்வொரு முறையும், பந்து எடுக்கும், எரியும் முறை மிகச் சரியாக இருக்கிறதா என அறிய வேண்டும்.

புரிந்துணர்தல் (Grasping Power)

ஒரு புதிய விஷயத்தை கூறும் போது, அதை நன்று புரிந்து கொள்கிறார்களா, எந்த தவறும் இல்லாமல் செய்தும் முடிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும்.

தொடர் கவனம் (Focus)

ஒரு விஷயம் செய்யும் போது, அவர்கள் அந்த விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதை அறிவது அவசியம். எடுத்துக்காட்டாக.ஒரு குறிப்பிட்ட தூரம் (short distance) ஓடச் சொல்லும் போது, யாரவது கூப்பிட்டாலோ, வேறு காராணிகளாலோ கவனம் சிதறாமல் இருக்கிறார்களா என கண்டறிவது அவசியம்.

இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் நினைக்கலாம். இவையெல்லாம் மிகச் சாதாரணமானவையே. இவையெல்லாம் உங்கள் குழந்தையின் விளையாட்டு திறனை கண்டறியவே. இவை எல்லாம் உங்கள் குழந்தைக்கு இருந்தால் அவர்களை விளையாட்டு வீரர்கள் ஆக்க நீங்கள் நிச்சயம் முயற்சிக்கலாம்.

இவை தவிர்த்து பெற்றோர்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக இருத்தலும் அவசியம். ஏனெனில் குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து ஊக்கப் படுத்தப்படுவார்கள். பெற்றோர்களும் விளையாட்டைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

இனி ஒவ்வொரு வாரமும் உங்கள் குழந்தைகள் விளையாட்டில் ஜொலிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி அலசலாம்.  

ரெடியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com