"பெங்களூர் ஒன்' மையங்களில் பாஸ்போர்ட் சேவை நிறுத்தம்

பெங்களூரி, டிச.21:   கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் "பெங்களூர் ஒன்' மையங்களில் பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்பட்டதால் நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் மின் ஆளுமை துறையின் சா
Updated on
1 min read

பெங்களூரி, டிச.21:   கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் "பெங்களூர் ஒன்' மையங்களில் பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்பட்டதால் நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

கர்நாடக அரசின் மின் ஆளுமை துறையின் சார்பில் அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் "பெங்களூர் ஒன்' என்ற ஒருங்கிணைந்த பொதுமக்கள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரில் 55 மையங்கள் செயல்படுகின்றன. இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

குடிநீர், மின்சார கட்டணம், மாநகராட்சி சொத்துவரி, அனைத்து செல்போன் கட்டணம், பியூசி தேர்வு கட்டணம்  செலுத்துவது, மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம், போக்குவரத்துக்கழக முன்பதிவு, நிவாரணநிதி வசூல், பாஸ்போர்ட் பதிவு போன்ற பல்வேறு பொதுமக்கள் சேவைகளை வழங்கி வருகிறது.

தரமான சேவையின் மூலம் இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் "பெங்களூர் ஒன்' மையங்களால், வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.

இவற்றில் முக்கியமான சேவை பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் விநியோகம், புதிய பாஸ்போர்ட் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகும்.

வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்த சேவை மையங்கள் வசதியாக இருந்து வந்தன.

தினமும் சுமார் 500 பாஸ்போர்ட்கள் வரை பதிவு செய்துவந்திருந்த "பெங்களூர் ஒன்' சேவைமையம் டிசம்பர் 15 முதல் திடீரென இச்சேவையை நிறுத்தியது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 இதனால் பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களை நம்பியிருக்க வேண்டியதிருக்கிறது. இங்கு ஒருநாளைக்கு 250 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படுகின்றன. மேலும்

காலை 10 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சேவையளிக்கப்படுகிறது. பெங்களூரின் எல்லா பகுதிகளிலும் செயல்பட்டு வரும் "பெங்களூர் ஒன்' சேவை மையங்கள் போல திருப்தியான சேவை கிடைக்கவில்லை.

எனவே "பெங்களூர் ஒன்' சேவை மையங்களில் மீண்டும் பாஸ்போர்ட் சேவையை தொடங்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com