தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கோல்கும்பஸ் ரயில் நேரத்தில் மாற்றம்

பெங்களூர்- சோலாப்பூர் இடையே தினசரி இயக்கப்படும் கோல்கும்பஸ் ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :12 மே 2013, 8:10 am IST

பெங்களூர்- சோலாப்பூர் இடையே தினசரி இயக்கப்படும் கோல்கும்பஸ் ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூர் (யஸ்வந்தபுரம்)- சோலாபூர் இடையே தினசரி இயக்கப்படும் கோல்கும்பஸ் ரயில் இயக்கப்படும் நேரம், ஜூலை 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படும். இந்த ரயில், ஜூலை 1- முதல், யஸ்வந்தபுரத்தில் இருந்து, இரவு 7.30 மணிக்கு புறப்படுகிறது. இது, அடுத்த நாள் அதிகாலை, 3.50 மணிக்கு ஹூப்ளியை சென்றடைகிறது. அங்கிருந்து 4.10 மணிக்கு புறப்பட்டு, 5.10 மணிக்கு, கதக்கை சென்றடைகிறது. அங்கிருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு, அன்று பிற்பகல் 1.30 மணிக்கு சோலாபூரை சென்றடைகிறது.
 சோலாபூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9 மணிக்கு கதக்கை வந்தடைகிறது. அங்கிருந்து 9.10 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 11 மணிக்கு ஹூப்ளியை வந்தடைகிறது. அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.35 மணிக்கு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
 ரயில் சேவை நிறுத்தம்:
 மைசூர்- ரேணிகுண்டா இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை, ஜூன் 14-ம் தேதிக்கு பிறகு நிறுத்தப்படுகிறது.
 கூடுதல் பெட்டி:
 கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக, மைசூர்- சென்னை இடையே இயக்கப்படும் வாராந்திர ரயிலில் (22681/82), ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும், ஒரு 2-ம் வகுப்பு படுக்கும் வசதி கொண்ட பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.