முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

மத்திய அரசின் இந்தி ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது

மத்திய அரசின் இந்தி ஆதிக்கத்தை, எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என கர்நாடக பாதுகாப்பு இயக்கத் தலைவர் டி.ஏ.நாராயணகெளடா தெரிவித்துள்ளார்.

Published On :

மத்திய அரசின் இந்தி ஆதிக்கத்தை, எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என கர்நாடக பாதுகாப்பு இயக்கத் தலைவர் டி.ஏ.நாராயணகெளடா தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், பெங்களூரு டவுன்ஹால் எதிரே திங்கள்கிழமை நடந்த தர்னா போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: இந்தியத் திருநாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பில், அனைத்து இந்திய மொழிகளுக்கும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டியது அவசியம்.

ஆனால், இந்தியை தேசிய மொழி என்று பறைசாற்ற முயற்சித்து, தேவையில்லா சர்ச்சைக்கு மத்திய அரசு வழிவகுத்துள்ளது. இந்தியை தேசியமொழி என அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. வட இந்தியாவில் ஒருசிலர் இந்தி பேசுகிறார்கள் என்பதற்காக, அந்த மொழியை தேசியமொழி என்று கூறி வருகிறார்கள்.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. இதனால், கன்னடம் உள்ளிட்ட திராவிட மொழிகள் நசுக்கப்படுகின்றன. திராவிட மொழிகளை அழிக்க பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இந்தி தினவிழா, இந்தி வாரவிழா போன்ற விழாக்களை நடத்தி, இதர இந்திய மொழிகளை புறக்கணிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

கன்னட மொழியை நசுக்கும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது. கன்னடத்தை அழித்து இந்தியைத் திணிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். கன்னட மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்க வேண்டும்.

இந்தி மொழி திணிப்பை தீவிரமாக எதிர்ப்போம் என்றார். போராட்டத்தில், கர்நாடக இலக்கியக் கழகத்தின் முன்னாள் தலைவர் நல்லூர் பிரசாத், கன்னடம் மற்றும் கலாசாரத்துறை முன்னாள் இயக்குநர் மனுபளிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.