பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரம், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஜெயின் கல்லூரி முதல்வர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை நடந்த மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியது: அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான சுகாதாரம், பாதுகாப்பை வழங்க வேண்டும். ஒரு சில பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஆனால், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதில்லை.
சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளித்து, சிறந்த கல்வியை வழங்க பள்ளி, கல்லூரிகள் முன்வரவேண்டும். கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றை மட்டும் வழங்கிவிட்டு, மற்றவற்றை வழங்கவில்லை என்றால், அங்கு பயிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வாய்ப்பில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

