டிச.31-இல் பெங்களூரு வருகிறார் அமித்ஷா
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, கர்நாடக அரசியல் நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக டிச.31-ஆம் தேதி பெங்களூரு வருகிறார்.


பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, கர்நாடக அரசியல் நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக டிச.31-ஆம் தேதி பெங்களூரு வருகிறார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ்,பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சிகள் அரசியல் வேலைகளில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன. பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கர்நாடக அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்வதற்காக பெங்களூருக்கு டிச.31-ஆம் தேதி வருவதற்கு திட்டமிட்டிருக்கிறார். மகதாயி ஆற்றுநீர் விவாதங்கள் உள்பட கர்நாடக தேர்தலில் முன்வைக்கவிருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்து கர்நாடக பாஜகவினருடன் அப்போது விவாதிக்கவிருக்கிறார். ஒருநாள் மட்டுமே தங்கியிருக்கும் அமித்ஷா, பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்களின் கட்சி வேலைகள் குறித்தும் ஆய்வு செய்யவிருக்கிறார். இதுதவிர, கட்சியின்மாநில அளவிலான உயர்நிலைக்குழு கூட்டத்திலும் அமித்ஷா கலந்து கொள்ளவிருக்கிறார். அமித்ஷாவின் வருகை கர்நாடக பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...