மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார் ஆளுநர் கிரண்பேடி என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் வழியில் ஞாயிற்றுக்கிழமை மங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் கிரண்பேடி தேவையில்லாமல் தலையிட்டு வருகிறார். என்றாலும், தடைகளைத் தகர்தெறிந்து வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக, திமுக உள்ளிட்ட 2 மாநிலக் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ரஜினியின் புதிய கட்சி, தமிழக மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். விரைவில் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, கோவை, கொச்சி, திருப்பதி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
புதுச்சேரி மாநிலம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்து வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

