எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தீ விபத்து: 3 பேர் பலி

சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:00 am

DIN

சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஸ் பிரதான் (27). இவரது மனைவி கர்னா (24). இவர்களது உறவினர் தேவன் (23), சவாண் ஆகிய 4 பேரும் வேலை நிமித்தமாக பெங்களூரு ஹெப்பகோடி திருபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நவ.10-ஆம் தேதி  காலை வீட்டில் கர்னா  சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீக்காயமடைந்த விகாஸ், கர்னா, தேவன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
சவாணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஹெப்பகோடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.