அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பகத்-கீ-கொத்தி விரைவு ரயில் ஜோத்பூர் வரை நீட்டிப்பு

பெங்களூரு-பகத்-கீ-கொத்தி வாரமிருமுறை இயக்கப்படும் விரைவு  ரயில் ஜோத்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:02 am

DIN

பெங்களூரு-பகத்-கீ-கொத்தி வாரமிருமுறை இயக்கப்படும் விரைவு  ரயில் ஜோத்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரிலிருந்து பகத்-கீ-கொத்தி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்கள்: 16508/16507) ஜோத்பூர் ரயில் நிலையம்(ராஜஸ்தான்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த ரயிலை பெங்களூரு-ஜோத்பூர் வாரமிருமுறை விரைவு ரயில் என்று அழைக்கப்படும். இந்த மாற்றம் நவ.20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில் எண்-16508-பெங்களூரு-ஜோத்பூர் வாரமிருமுறை விரைவு ரயில் பகத்-கீ-கொத்தி ரயில் நிலையத்திற்கு மாலை 4.24 மணிக்கு வந்தடையும். பின்னர், மாலை 4.26 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு ஜோத்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது
 இதேபோல, ரயில் எண்-16507-ஜோத்பூர்-பெங்களூரு வாரமிருமுறை விரைவு ரயில் காலை 5.20 மணிக்கு ஜோத்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அதேநாளில் காலை 5.38 மணிக்கு பகத்-கீ-கொத்தி ரயில் நிலையத்திற்கு வந்து காலை 5.40 மணிக்குப் புறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.