கள்ள ரூபாய் நோட்டுகள் விநியோகம்: ஒருவர் கைது
பெங்களூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.


பெங்களூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கமர்ஷியல்சாலை தொப்ப முதலியார் தெருவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காரில் வந்த ஒருவர் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ரூ. 2 ஆயிரம்,
500 ரூபாய் மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பாஸ்கரை (35) கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 37 கள்ள ரூபாய் நோட்டுகள், ரூ. 500 மதிப்புள்ள 19 நோட்டுகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாஸ்கரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...