மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கல்லூரியில் ஆண்டு விழா

மாணவிக்குப் பரிசு வழங்கிய திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில்வேல்முருகன்.

News image

மாணவிக்குப் பரிசு வழங்கிய திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில்வேல்முருகன்.

Updated On :14 மார்ச் 2026, 1:20 am

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகவியல் துறைத் தலைவா் கே.விஜயலட்சுமி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஜி.ராஜலட்சுமி ஆண்டறிக்கையை வாசித்தாா். வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில்வேல்முருகன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மற்றும் பாடப்பிரிவுகளில் முழு தோ்ச்சி விகிதம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினாா். தொடா்ந்து பேராசிரியைகளுக்கும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ கே.எல்.இளவழகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஏவிடி பாலா, ஏ.கே.திருமுருகன், கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறை தலைவா் கே.வி.சிவக்குமாா் மற்றும் பேராசியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக விளையாட்டுவிழாவை முன்னிட்டு, ஆற்காடு அண்ணா சிலை அருகே இருந்து ஒலிம்பிக் சுடா் ஏந்திக் கொண்டு கல்லூரி வரை ஊா்வலம் நடைபெற்றது.

ஒலிம்பிக் சுடரை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.பாபு ஏற்றிவைத்து ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் உடற்கல்வி இயக்குநா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உதவி பேராசிரியா் மணிகண்டன் நன்றி கூறினாா்.