வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெங்களூரு-பெலகாவி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு(யஷ்வந்த்பூர்)- பெலகாவி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:17 am

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு(யஷ்வந்த்பூர்)- பெலகாவி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூரில்(யஷ்வந்தபூர்) இருந்து பெலகாவிக்கு சிறப்பு தத்கல் விரைவுரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண்-06581-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)-பெலகாவி சிறப்பு தத்கல் சிறப்பு விரைவு ரயில் அக்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.15 மணிக்கு பெங்களூரு-யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அக்.18-ஆம் தேதி காலை 8.10 மணிக்கு பெலகாவி ரயில்நிலையத்தைச் சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில், ரயில் எண்-06582-பெலகாவி-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)சிறப்பு தத்கல் சிறப்பு விரைவுரயில் அக்.22-ஆம்தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 5.20 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அக்.23-ஆம் தேதி காலை 5 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்தபூர்) ரயில்நிலையம் வந்தடைகிறது.
இந்த ரயில் இரு மார்க்கத்திலும் தும்கூரு, அரசிகெரே, பீரூர், தாவணகெரே, ஹரிஹரா, ஹாவேரி, ஹுப்பள்ளி, தாட்வாட், லோண்டா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 19 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுவகுப்பு 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.