

பொறியாளரைக் கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஒடிஸா மாநில புவனேசுவரத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் பிரணாய் மிஸ்ரா (25). இவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த அக்.9-ஆம் தேதி மடிவாளா அருகே உள்ள தாவரகெரேவில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டது தொடர்பாக பிரணாய் மிஸ்ராவிற்கும், 2 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையயடுத்து, தகராறில் ஈடுபட்டவர்கள் பிரணாய் மிஸ்ராவை பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மிஸ்ரா நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மடிவாளா போலீஸார், கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஹுஸ்கூர் கேட் அருகே நண்பருக்காக காத்திருந்த கொலையில் தொடர்புடைய கார்த்திக்கை போலீஸார் பிடிக்க முயன்றனர்.
அப்போது, போலீஸாரை நோக்கி கல்களை வீசி தாக்குதல் நடத்திய கார்த்திக், அங்கிருந்த தப்பிக்க முயன்றார். இதையடுத்து, அவரை காலில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அருணை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எரிபொருள் தட்டுப்பாடு! செல்போன் டவர், இணைய சேவை பாதிக்கும் அபாயம்!

தங்கம் விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: சென்னையில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்!

மின் அடுப்புகள் விற்றுத்தீர்ந்தன! கடைகளிலும், ஆன்லைனிலும் ’அவுட் ஆஃப் ஸ்டாக்’!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

