மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எத்தனை முறை கர்நாடகத்துக்கு வந்தாலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதி: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எத்தனை முறை கர்நாடகத்துக்கு வந்தாலும்,  மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:32 am

DIN

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எத்தனை முறை கர்நாடகத்துக்கு வந்தாலும்,  மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ய வஸ்ய பட்டதாரிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 
 ஜனநாயக நாட்டில் யார்,  எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.  பிரதமர் நரேந்திர மோடி,  அமித்ஷா போன்றவர்கள் கர்நாடகத்துக்கு வருவதில் தவறில்லை.  ஆனால்,  அவர்கள் எத்தனை முறை கர்நாடகத்துக்கு வந்து பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தாலும்,  மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடிப்பது உறுதி.      பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா,  கர்நாடகத்துக்கு வரும்போதெல்லாம், விவாதத்திற்குரிய வகையில் பேசி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.   ஆனால் காங்கிரஸ் அரசு மாநிலத்தில் தொடர்ந்து அமைதியை பேணிக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மாநிலத்தில் அமைதியைக் குலைக்க யாரேனும் முயற்சி மேற்கொண்டால்,  அதனை வேடிக்கை பார்க்க முடியாது.  பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதில் பாஜகவினரை வெல்ல யாராலும் முடியாது.  ஆனால் அவர்களின் பொய் பிரசாரத்தை கர்நாடக மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.
மேலும் மகதாயி, கலசா-பண்டூரி விவகாரத்தில் பிரதமர் தலையிடுமாறு கடிதம் எழுதி இருந்தேன்.  அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அண்மையில் மகதாயி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து,  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.  இந்த கடித்தத்திற்கு பிறகு மகதாயி விவகாரத்தில் பிரதமர் தலையிடுவார் என்று நம்புகிறேன் என்றார் அவர். 
     நிகழ்ச்சியில் சட்டமேலவைத் தலைவர் சங்கரமூர்த்தி,  மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.