சாலைத் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
பெங்களூரு நைஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள தனது நண்பர் லோகேஷுடன் பரத் (20) என்பவர் சென்றுள்ளார்.
பன்னரகட்டா மேம்பாலத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பரத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த அவரது நண்பர் லோகேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஹுலிமாவு போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.