பெங்களூரு- கச்சேகுடா சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரிலிருந்து  கச்சேகுடாவுக்கு  கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Updated on
1 min read

பெங்களூரிலிருந்து  கச்சேகுடாவுக்கு  கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயின் ஆலோசனையின் பேரில் , கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூரிலிருந்து (கிருஷ்ணராஜபுரம்) கச்சேகுடாவுக்கு(ஹைதராபாத்) இயக்கப்படும் ரயில் எண்கள்-07603/07604-கச்சேகுடா-பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்)-கச்சேகுடா சிறப்பு விரைவு ரயில் 4 நடைகளுக்கு இயக்கப்படுகிறது. 
ரயில் எண்-07603-கச்சேகுடா-பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) சிறப்பு வாராந்திர விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் கச்சேகுடா ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் காலை 6 மணிக்கு பெங்களூரு(கிருஷ்ணராஜபுரம்) ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரயில் மார்ச் 4 முதல் 25-ஆம் தேதிவரை இயக்கப்படுகிறது.
மறு மார்க்கத்தில், ரயில் எண்-07604-பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்)-கச்சேகுடா சிறப்பு வாராந்திர விரைவு
ரயில் திங்கள்கிழமைகளில் மாலை 3.25 மணிக்கு பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.55 மணிக்கு கச்சேகுடா ரயில்நிலையம் சென்றடைகிறது. இந்த ரயில் மார்ச் 5 முதல் 26-ஆம் தேதிவரை இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு எலஹங்கா, ஹிந்துபூர், பெனுகொன்டா, ஸ்ரீசாய்பிரசாந்திநிலையம், தர்மாவரம், அனந்த்பூர், கூட்டி, தோனே, கர்னூர் டவுன், கட்வால், மஹபூப்நகர், ஜடசேரியா வழியாக கச்சேகுடா ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. 
ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 10 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், சரக்கு மற்றும் பிரேக் பெட்டிகள் 2 உள்ளிட்ட 17 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com