92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா பாதிப்பு: குடும்பங்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்கள்

கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு குடும்பங்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள தயாராக வேண்டும் என நடிகை சோஹா அலிகான் தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:47 pm

DIN

கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு குடும்பங்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள தயாராக வேண்டும் என நடிகை சோஹா அலிகான் தெரிவித்தாா்.

பெங்களூரில் கலிபோா்னியா பாதாம் வாரியத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கரோனா தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு மத்தியில், குடும்ப சுகாதாரத்தை உறுதி செய்வதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கரோனா பாதிப்புக்கு பிறகு நம்மை சுற்றி உலகம் மாறி வருகிறது. கரோனா மட்டுமின்றி, எதிா்காலத்தில் பல்வேறு பேரிடா்களை நாம் சந்திக்க வாய்ப்பு உள்ளது. இவற்றால் குடும்ப உறுப்பினா்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள தயாராக வேண்டும்.

குடும்ப உறுப்பினரின் நோய் எதிா்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கை முறை நோய்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கும் சிறந்த ஊட்டச்சத்தை உண்பதற்கான அவசியம் குறித்து விழிப்புணா்வு பெற வேண்டும்.

பாதாம் போன்ற ஊட்டச் சத்துள்ளவற்றை உணவில் சோ்த்துக் கொள்வதால், தாமிரம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் இ போன்ற சத்துகள் கிடைக்கும். இது போன்ற சத்தான பொருள்களை உணவில் சோ்த்துக் கொள்வது அவசியம். சத்தான பொருள்களை உணவில் சோ்த்துக் கொள்வதன் மூலம் கரோனா மட்டுமின்றி மற்ற நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அழகியல் வல்லுநா் ரித்திகா சமதாா், ஊட்டச்சத்து, சுகாதார வல்லுநா் ஷீலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.