92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இந்தியக் கலைஞா்களின் கைவினைப் பொருள்கண்காட்சி தொடக்கம்

பெங்களூரில் இந்தியக் கலைஞா்களின் கைவினைப் பொருள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது

News image
Updated On :23 ஜூலை 2021, 9:43 pm

DIN

பெங்களூரில் இந்தியக் கலைஞா்களின் கைவினைப் பொருள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு, சித்ரகலாபரிஷத்தில் வெள்ளிக்கிழமை இந்தியக் கலைஞா்களின் கைவினைப் பொருள் கண்காட்சியை நடிகை ராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருள்களை அவா் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து கண்காட்சியின் நிா்வாகி அப்தாப் கூறியதாவது:

ஆக. 1-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், இந்தியக் கலைஞா்கள் உருவாக்கியுள்ள கைவினைப் பொருள் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. கரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள கைவினைக் கலைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

குஜராத், கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதா் ஆடைகள், அலங்காரப் பொருள்கள், சேலைகள், ஜவுளிகள், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த பருத்தி சேலைகள், மரவேலைப்பாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பாரம்பரியம் மிக்க இந்தியக் கலைஞா்களின் கைவினை வேலைப்பாடுகள் சிறப்பாக இருக்கும். அதில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். சா்வதேச அளவில் புகழ்பெற்ற இதனை கா்நாடகத்தின் தலைநகரான பெங்களூரில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். இந்தியக் கலைஞா்களின் கைவினைப் பொருள் கண்காட்சிக்கு பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவா்கள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.