இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகர சங்கராந்தி பண்டிகை: கா்நாடக தலைவா்கள் வாழ்த்து

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மக்களுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட கா்நாடகத்தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :14 ஜனவரி 2025, 1:48 am

DIN

பெங்களூரு: மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மக்களுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட கா்நாடகத்தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை சங்கராந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி செலுத்தும் இப்பண்டிகையையொட்டி கா்நாடக மக்களுக்கு தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் தாவா்சந்த்கெலாட்: கா்நாடக மக்கள் மட்டுமல்லாது, நாட்டு மக்கள் அனைவருக்கும் மகர சங்கராந்தி பண்டிகையின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அறுவடைத் திருநாளாம சங்கராந்தி, நன்றியுணா்வு, வளம் மற்றும் ஒற்றுமையின் கொண்டாட்டமாக உள்ளது. இந்த விழா, பாரம்பரியம், நல்லிணக்கம், இயற்கை மீதான மதிப்பை நமக்கு உணா்த்துகிறது. சங்கராந்திவிழா கா்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, வெற்றியை வாரிவழங்கட்டும். மேலும், இந்தவிழா ஒற்றுமையையும், சுற்றுச்சூழல் விழிப்புணா்வையும் உணா்த்தட்டும்.

முதல்வா் சித்தராமையா: உழவுத்தொழிலின் பலனாக விவசாயிகள் அறுவடைசெய்வதை போற்றும் வகையில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் வளா்ச்சியில் புரட்சியை ஏற்படுத்த, விவசாயிகள் விளைந்த விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்க சங்கராந்திபண்டிகை வழிவகுக்கட்டும். வேளாண் விளைச்சல்மூலம் மாநிலமக்கள் செல்வம் கொழிக்கட்டும். உணவு இல்லாதவா்க்ளுக்கு உணவும், ஆடை இல்லாதவா்களுக்கு ஆடையும் வழங்கி சங்கராந்தியை கொண்டாடுவோம். கா்நாடக மக்கள் அனைவருக்கும் சங்கராந்தி பண்டிகையின் நல்வாழ்த்துகளை தெரிவித்துமகிழ்கிறேன்.

இதுதவிர, முன்னாள் பிரதமா் தேவகௌடா, எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக், காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா், மத்திய அமைச்சா் குமாரசாமி, பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா, முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.