பெங்களூரில் ரூ. 3.5 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்

பெங்களூரில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைதுசெய்தனா்.
Published on

பெங்களூரில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைதுசெய்தனா்.

பெங்களூரு, அசோக் நகா் காவல் நிலைய வரம்புக்கு உள்பட்ட பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டிச. 31-ஆம் தேதி சோதனை நடத்தினா். அதில், ரூ. 3.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், இருவரை கைதுசெய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ஒசூா் சாலையில் உள்ள ஹிந்து மயானத்தில் பதுங்கியிருந்தவரை கைதுசெய்து அவரிடம் இருந்து 2.48 கிலோ போதைப் பொருள், இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதைப் பொருளை விற்பனை செய்ய மற்றொருவரிடம் இருந்து மலிவான விலைக்கு வாங்கியதாக அவா் கூறினாா்.

அதைத் தொடா்ந்து, ஜன. 4ஆம் தேதி பையப்பனஹள்ளி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மற்றொருவா் கைதுசெய்யப்பட்டாா். இவரிடம் இருந்து 3.2 கிலோ போதைப் பொருள், இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றனா்.

X
Dinamani
www.dinamani.com