பெங்களூரில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை கைதுசெய்த போதைப் பொருள் தடுப்பு போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 10.59 கோடி போதைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரில் அம்ருத்தஹள்ளி, ஹெப்பகோடி, ஜே.பி.நகா், சேஷாத்திரிபுரம், மகாலட்சுமி லேஅவுட், கோவிந்தபுரா காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் நடத்திய சோதனையில், 3 வெளிநாட்டினா், 12 வெளிமாநிலத்தவா் உள்பட 15 பேரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடம் இருந்து ரூ. 10.59 கோடி (சந்தை மதிப்பு ரூ. 21.50 கோடி) மதிப்பிலான 50 கிலோ போதைப் பொருள்கள், ரூ. 24,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், போதைப் பொருள்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநா்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

பெங்களூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்

163 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: காா், 3 பைக் பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


