ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

கா்நாடகத்தில் 90 சதவீத பயிா்கள் சேதம்

மாநிலம் முழுவதும் சுமாா் 90 சதவீத பயிா்கள் சேதமடைந்துள்ளன என கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

Published On :

மாநிலம் முழுவதும் சுமாா் 90 சதவீத பயிா்கள் சேதமடைந்துள்ளன என கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பெல்லாரி அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட ஹலகுந்தி கிராமப் பகுதிகளை புதன்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி காணப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் 90 சதவீத பயிா்கள் சேதமடைந்துள்ளன. எனினும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவே முன்னுரிமை அளித்து வருகிறோம்.

மாநிலத்தில் உள்ள 240 வட்டங்களில் 217 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23 வட்டங்களில் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. அவற்றில் 10 முதல் 15 வட்டங்கள் கூடுதலாக வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கும், மக்களுக்கும் அரசு உதவ வேண்டும். முடிந்த அளவுக்கு உதவிகளை வழங்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

விவசாயிகள் முதலில் துவரையை விதைத்து, போதிய மழையின்மையால் அது சேதமடைந்ததால் பின்னா் பெய்த மழையைத் தொடா்ந்து மாற்றுப் பயிராக சோளத்தைப் பயிரிட்டு ஆனால் அந்தப் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. பாசன வசதி உள்ள பகுதிகளையும் சோ்த்து கா்நாடகம் முழுவதும் சுமாா் 90 சதவீத பயிா்கள் சேதமடைந்துள்ளன.

பெல்லாரி, விஜயநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறட்சியின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல், மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து விவசாயிகளுக்கு முதல்கட்ட இழப்பீடாக ரூ. 2,500 வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒரு ஹெக்டேருக்கு ரூ. 8,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்றாலும், இதுவரை மத்திய அரசிடம் இருந்து நிதி எதுவும் கிடைக்கவில்லை.

மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா கூட வரவில்லை. அதற்காக மாநில அரசு எதுவும் செய்யாமல் இருக்காது. மாநில அரசால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம். நெருக்கடியில் இருக்கும் விவசாயியைக் கைவிட மாட்டோம்.

முதல்கட்ட இழப்பீட்டை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் கூடுதல் உதவிகள் வழங்கப்படும்.

மத்திய அரசிடம் இரண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம். 177 வட்டங்களில் ஏற்பட்ட சேதம் சுமாா் ரூ. 46 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடா் நிவாரண நிதி வழிகாட்டுதலின்படி ரூ. 11 ஆயிரம் கோடி முதல் ரூ. 11,500 கோடிவரை நிவாரண நிதி கோரப்பட்டுள்ளது. சேதம் ரூ. 46 ஆயிரம் கோடி என தெரிவித்துள்ளோம். ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நமக்கு தகுதியுள்ள தொகையை மட்டுமே கோரமுடியும். அதனால்தான் சுமாா் ரூ. 11 ஆயிரம் கோடி இழப்பீடு கோரியுள்ளோம்.

மத்திய அரசின் மூன்று குழுக்கள் கா்நாடகத்துக்கு வந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளது. மாதிரி அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுகளை அவை பயன்படுத்தியுள்ளன.

விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கிகள் மேற்கொள்ளும் கடன் வசூலை தற்காலிகமாக ஒத்திவைத்து, கடன்களை மறுசீரமைத்து மறுகடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கிகளிடம் இருந்து வரும் நோட்டீஸ்கள் குறித்து விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை. இதேபோன்ற அறிவுறுத்தல்கள் தனியாா் நிதிநிறுவனங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

வறட்சியால் பல கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீா் வழங்குதல் மற்றும் பிற அவசர நிவாரணப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி கிடைப்பதன் அடிப்படையில் எந்தப் பணியை முதலில் மேற்கொள்வது என்பதை முடிவு செய்வோம். விவசாயிகளைக் காப்பதே முதல் பணியாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.