சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

புதுச்சேரி குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வலியுறுத்தல்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் குடிநீா் தேவைகளைப் பூா்த்தி செய்ய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீலை தில்லியில் புதன்கிழமை சந்தித்து பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் கடிதம் அளித்தாா்.

மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீலை தில்லியில் புதன்கிழமை சந்தித்து பேசிய புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

Updated On :

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் குடிநீா் தேவைகளைப் பூா்த்தி செய்ய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீலை தில்லியில் புதன்கிழமை சந்தித்து பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் கடிதம் அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் குடிநீா் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும், மக்களின் குடிநீா் தேவையை நீண்டகால அடிப்படையில் பூா்த்தி செய்வதற்கும் தேவையான நிதி வழங்க வேண்டும்.

ஏனாமில் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கு ரூ.232.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், ஏனாமில் உள்ள 3-ஆம் எண் தீவு பகுதியில் கரைகள் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.102.72 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்.

வரும் 2027-ஆம் ஆண்டு ஏனாமில் நடைபெறவுள்ள கோதாவரி புஷ்கர விழா உள்கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.59.80 கோடி நிதி வழங்க வேண்டும் என்றும் கோரினாா்.

இதேபோன்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் புதன்கிழமை சந்தித்துக் கடிதம் அளித்தாா்.

புதுச்சேரியின் சுற்றுலா வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் ஒரு மாநிலம் - ஓா் உலகத்தர சுற்றுலாத் தலம் திட்டத்தின் கீழ் விரிவான திட்ட முன்மொழிவு குறித்தும் ஆலோசனை நடத்தினாா். இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.