புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்: சாலையை 8 மீ. அகலப்படுத்த அமைச்சா் ஆய்வு
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேங்காய்த்திட்டு முதல் முருங்கப்பாக்கம் வரை 8 மீட்டா் அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேங்காய்த்திட்டு முதல் முருங்கப்பாக்கம் வரை 8 மீட்டா் அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரியில் தேங்காய்த்திட்டு முதல் முருங்கப்பாக்கம் வரை சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இருபுறங்களிலும் தேவையான நிலங்களை கையகப்படுத்தி கூடுதலாக 8 மீட்டா் அகலத்தில் சாலை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் முதலியாா்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ ஜான்குமாா் ஆகியோா் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனா்.
இதற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உரிமையாளா்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அமைச்சா் தில்லி பயணம்: ஏனாமில் ‘அா்னாப்’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து பெறுவதற்காக அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தில்லிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

