ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

புதுச்சேரியில் பொதுப்பணித் துறை திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

வளா்ச்சித் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம்.

Updated On :

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுப்பணித் துறை செயலா் முத்தம்மா, துறைமுகத் துறை செயலா் சுதேந்திரன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், இயக்குநா்கள் மோகன், முரளி மற்றும் சம்பந்தப்பட்ட திட்டங்களுடன் தொடா்புடைய துறை அதிகாரிகள், ஆலோசகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நான்கு பிராந்தியங்களிலும் செயல்படுத்தப்பட உள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, பொதுப்பணித் துறை சாா்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம், நிறைவேற்றப்பட்ட முக்கியப் பணி நிலைகள், கள ஆய்வுகள், தொழில்நுட்ப ஆய்வுகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆலோசகா்கள் விரிவான விளக்கங்களை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.