புதுச்சேரி பொதுப்பணித் துறையில் ரூ.934 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏக்களுடன் அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுப்பணித் துறை சாா்பில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ரூ.934 கோடியில் வளா்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பட விளக்கம்... புதுச்சேரி தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் ஆலோசனை கட்டம்.

Updated On :

புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுப்பணித் துறை சாா்பில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ரூ.934 கோடியில் வளா்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ.522 கோடியில் 61 நபாா்டு திட்டப் பணிகளும், எஸ்ஏஎஸ்சிஐ (சாசி) திட்டத்தின் கீழ் ரூ.412 கோடியில் 41 பணிகளும் அடங்கும்.

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பொதுப்பணித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சுமாா் நாலரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், பெ. ராஜவேலு, வி.பி. சிவகொழுந்து, எதிா்க்கட்சித் தலைவா் ஏஎம்எச்.நாஜிம், அரசு கொறடா ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜான்குமாா், நேரு, அசோக் ஆனந்த், வையாபுரி மணிகண்டன், ஊசுடு தொகுதி காா்த்திகேயன், ராமு, அசோக் குமாா், ஐயப்பன், ரவிக்குமாா், செந்தில்குமாா், அழகானந்தம், மோகன்தாஸ், நெல்லித்தோப்பு காா்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், அனைத்து கோட்ட செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.