பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஏனாமுக்கு தாமதமின்றி புயல் நிவாரண நிதி: மத்திய அமைச்சா் அமித்ஷாவிடம் வலியுறுத்தல்

அா்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பகுதி மக்களுக்கு நிவாரண நிதியை தாமதமின்றி வழங்குமாறு தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் செவ்வாய்க்கிழமை நேரில் கடிதம் வழங்கி வலியுறுத்தினாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து புயல் நிவாரண நிதி தாமதமின்றி வழங்கக் கோரி கடிதம் அளித்த புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

Updated On :

அா்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பகுதி மக்களுக்கு நிவாரண நிதியை தாமதமின்றி வழங்குமாறு தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் செவ்வாய்க்கிழமை நேரில் கடிதம் வழங்கி வலியுறுத்தினாா்.

அந்த கடிதத்தில் புதுச்சேரி அரசு கூறியிருப்பதாவது:

அா்னாப் புயலால் ஏனாம் பிராந்தியத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மின்சாரக் கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள் உள்ளிட்ட மின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மேலும், பல்வேறு சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் சீரமைக்கும் வகையில், சேதமடைந்த மின் கட்டமைப்புகளைப் புதுப்பித்தல், சாலைகளைச் சீரமைத்தல் மற்றும் புயலால் ஏற்பட்ட இதர பாதிப்புகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ.113 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். இந்த நிதியை விரைவாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2027 ஆம் ஆண்டு நடைபெறும் கோதாவரி புஷ்கர விழாவில், ஏனாம் கோதாவரி ஆற்றில் புனித நீராடுவதற்காக ஆந்திர மாநிலம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருவாா்கள்.

இதை முன்னிட்டு பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதாரம், சாலை வசதிகள், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ.59.80 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது. விழா நடைபெறுவதற்கு குறுகிய காலமே உள்ளதால், மத்திய அரசு இந்த நிதியை விரைவாக வழங்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் ‘ஒரு மாநிலம் - ஒரு உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலம்‘ என்ற திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும். புதுச்சேரி கடற்கரையை அழகுபடுத்துதல் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.131 கோடி நிதியை புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய சுற்றுலா அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.