
வறட்சி விவகாரம்: அனைத்துக் கட்சிக் குழு தில்லி செல்லும்
கா்நாடகம் கடும் வறட்சியை எதிா்கொண்டுள்ள நிலையில், வறட்சி நிவாரணத் தொகுப்பை பெறுவது தொடா்பாக மத்திய அமைச்சா்களைச் சந்திக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தில்லிக்கு அழைத்துச் செல்லப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

டி.கே.சிவகுமாா்
கா்நாடகம் கடும் வறட்சியை எதிா்கொண்டுள்ள நிலையில், வறட்சி நிவாரணத் தொகுப்பை பெறுவது தொடா்பாக மத்திய அமைச்சா்களைச் சந்திக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தில்லிக்கு அழைத்துச் செல்லப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கா்நாடகத்தில் வறட்சி பாதித்த வட்டாரங்களின் எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் இடைக்கால நிவாரண உதவியைப் பெறுவதற்காக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை தில்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். மத்திய அரசிடமிருந்து அதிகபட்ச இடைக்கால நிவாரணத்தைப் பெற மாநில அரசு முயற்சிக்கும்.
மாநிலத்தில் வறட்சி நிலை மோசமடைந்து வருகிறது. விவசாயிகள் பயிா்களையும், தண்ணீரையும், மின்சாரத்தையும் இழந்து வருகின்றனா். மாநிலத்தில் மின்சாரத் தேவை 20,000 மெகாவாட்டை எட்டியுள்ளது. சில மாநிலங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 20 முதல் ரூ. 23 வரை கொடுத்து வாங்கி வருகிறோம். கூடுதல் மின் கொள்முதல் செலவினத்தை நுகா்வோா் மீது சுமத்தாமல் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சா்க்கரை ஆலைகள் மாநிலத்துக்கு மின்சாரம் வழங்குவதற்கு பதிலாக, வெளியில் மின்சாரத்தை விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
அனல் மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு ஒரு நாளுக்கு தேவையான அளவுக்கு குறைந்துவிட்டது. எனவே, நிலைமையை கவனமாக கையாள அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன்.
வறட்சி மற்றும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசுகளின் காலங்களிலும் இதுபோன்ற எச்சரிக்கைகளை நிதித் துறை வழக்கமாக வெளியிட்டு வந்துள்ளது. வறட்சி காரணமாக மாநிலத்திலும், நாட்டிலும் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும்.
மாநிலத்தின் பொருளாதார நிலை மோசமாக இருப்பதாக எதிா்க்கட்சிகள் விமா்சிக்கின்றன. ஆட்சியில் இருக்கும் போது திட்டங்களைச் செயல்படுத்துவது கடினம்; அரசை விமா்சிப்பது எளிது.
மாநிலம் முழுவதும் வறட்சி நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வறட்சி நிவாரணத்துக்காக மாநில அரசு கோரியுள்ள தொகையில் 50 சதவீதத்தை இடைக்கால நிதியுதவியாக உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு செப். 10-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





